புதிய இளைஞர் மேம்பாட்டு மாதிரித் திட்டம் (MBPB) மார்ச் மாதம் தொடங்கப்படும்; பிரதமர் அறிவிப்பு

கோலாலம்பூர், அக்டோபர் 30 :

இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தும் நோக்கில், புதிய இளைஞர் மேம்பாட்டு மாதிரித் திட்டம் (MBPB) 2030, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்படும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

இளைஞர்களின் அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த 10 ஆண்டுகளில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தத் திட்டம் அமையும் என்றார்.

“MBPB 2030 செயல்படுத்தப்படும்போது, ​​புதிய வேலைகள் மற்றும் கல்வி வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் அவர்களின் சமூக-பொருளாதார நிலையை அதிகரிக்க முடியும்.

“மேலும், இது இளைஞர்களுக்கான ஆதரவு அமைப்பை மேலும் வலுப்படுத்தும், குறிப்பாக அவர்களின் குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுடனான உறவை இன்னும் வலுப்படுத்தும் என்றார்.

இன்று 2021 தேசிய இளைஞர் தின கொண்டாட்டத்தின் தொடக்கத்தில் உரையாற்றிய பிரதமர், “இந்த திட்டம், அதிக தன்னம்பிக்கை மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் இளைஞர்களை உருவாக்கும்” என்றும் இளைஞர்களிடையே தன்னார்வ உணர்வை அரசாங்கம் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் இஸ்மாயில் கூறினார்.

நேற்று அறிவிக்கப்பட்ட 2022 வரவு செலவுத் திட்டத்தில், அரசாங்கம் இளைஞர்களை புறக்கணித்துள்ளது என்ற விமர்சனங்களையும் இஸ்மாயில் குறிப்பிட்டார், இளையோருக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவுவதை நோக்கமாகக் கொண்ட 25 நடவடிக்கைகள் அந்த MBPB 2030 திட்டம் உள்ளதாகக் கூறினார்.

அவற்றில் 600,000 புதிய வேலைகளை உருவாக்க JaminKerja திட்டமும் 80,000 ஒப்பந்தத் திறப்புகளுக்கான MyStep திட்டமும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here