வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு நீரிழிவு, ரத்த கொதிப்பு இருந்தால் விசா நீடிக்கப்படாதா? பிரெஸ்மா உள்ளிட்ட அமைப்புகள் அதிருப்தி

அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை நாட்டிற்கு தருவிப்பதில் பல சிரமங்களை நாங்கள் எதிர்கொண்டு வரும் வேளையில் அமைச்சருக்கும் கூட தெரியாமல் அந்நிய தொழிலாளர்களுக்கு  FOMEMA புதிய மாற்றத்தை கொண்டு வருவது குறித்து மலேசிய முஸ்லீம் உணவக உரிமையாளர்கள் சங்கம் (பிரெஸ்மா) மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கம் (பிரிமாஸ்) உள்ளிட்ட பல சங்கங்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றன.

முன்பு அந்நிய தொழிலாளர்களுக்கான மருத்துவ சோதனை தொடர்ச்சியாக முதல் மூன்று ஆண்டுகளுக்கும் தொடர்ச்சியாகவும் அதன் பின் 7ஆம் ஆண்டு வரை மருத்துவ பரிசோதனை தேவையில்லை என்று இருந்தது. அதன் பின் முதல் மூன்று ஆண்டுகளுக்கும் அதன் பின் 5,7,9 ஆகிய ஆண்டுகளில் மருத்துவ சோதனை செய்ய வேண்டும் என்று மாற்றப்பட்டது. ஆனால் தற்பொழுது ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறப்படுவதாக பிரெஸ்மா தலைவர் டத்தோ ஜவஹர் அலி தெரிவித்தார்.

அதைவிட நீரிழிவு நோய், ரத்த கொதிப்பு ஆகிய பிரச்சினைகள் இருக்கும் அந்நிய தொழிலாளர்களுக்கான விசா  அனுமதி மறுக்கப்படும்  என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் தற்பொழுதைய சூழ்நிலையில் நீரிழிவு, ரத்த கொதிப்பு என்பது உலகளவில் சாதரமாணதாகும். அதை காரணமாக கூறி அந்நிய தொழிலாளர்களின் விசா நீட்டிப்பினை ரத்து செய்வது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்தார்.

பிரிமாஸ் துணைத் தலைவர் கிருஷ்ணன் கூறுகையில் அந்நிய தொழிலாளர்களுக்கான நடைமுறைகள் நாளுக்கு நாள் மாறுபடுவதால் நாம் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. தற்பொழுதுள்ள சட்ட விதிகளை அரசாங்கம் மறுபரிசீலினை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் புதிய தொழிலாளர் விசா ஆகியவை எடுக்க 3 மாத கால அவகாசம் பிடிக்கிறது.

அப்படி இருக்கையில் அவருக்கு நீரிழிவு, ரத்த கொதிப்பு ஆகியவை இருந்தால் விசா நீட்டிக்கப்படாது என்பது உலகளவில் இல்லாத சட்டமாகும். மேலும் ஒரு தொழிலாளர் நாடு திரும்பினால் அவருக்கு பதிலாக மாற்றுத் தொழிலாளியை தருவிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here