உணவு வளாகத்தின் பின்புற கால்வாயில் சிறுநீர் கழித்த ஊழியர் ; உணவகத்தை இரண்டு வாரங்களுக்கு மூட உத்தரவு

மலாக்கா:

ஜாலான் ஹாங் துவாவில் உள்ள மாமாக் உணவகத்தின் ஊழியர் ஒருவர், வளாகத்தின் பின்புற வாய்க்காலில் சிறுநீர் கழித்தது போன்ற காணொளிக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, மாநில சுகாதாரத் துறை மேற்கொண்ட திடீர் சோதனையில் குறித்த உணவகம் தூய்மையின்றி காணப்பட்டதால் அவ்வுணவகத்தை இரண்டு வாரங்களுக்கு மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொதுமக்களின் புகார்கள் மற்றும் 21 விநாடிகள் கொண்ட வீடியோ கிளிப்பைத் தொடர்ந்து தமது துறை திடீர் ஆய்வுக்குப் பிறகு இந்த மூடலுக்கான உத்தரவை பிறப்பித்ததாக மாநில சுகாதாரத் துறை துணை இயக்குநர் (உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப் பிரிவு) டோராத்தி தயாங் ஹென்றி சாம் கூறினார்.

இந்த ஆய்வின் போது, பல்வேறு குற்றங்களுக்காக நான்கு அபிராதங்களும் வழங்கப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here