இசையமைப்பாளராக அறிமுகமாகும் லிடியன் நாதஸ்வரம்

‘பரோஸ்’ என்ற புதிய மலையாள படத்தை நடிகர் மோகன்லால் இயக்கி நடிக்கிறார். இந்த படத்தில் லிடியன் நாதஸ்வரம் இசைஅமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.படத்தின் பாடல்களுக்கு இசை அமைக்கிறார்.

இந்த மலையாளமொழி படம் காவிய கற்பனை திரைப்படமாகும் . ஜிஜோ புன்னூஸ் எழுதிய ஒரு நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகுகிறது. இந்த படத்தை ஆசிர்வாத் ஆண்டனி தயாரிக்கிறார். இதில் மாயா, சீசர் லோரெண்டே ராடன், கல்லிரோய் சியாபெட்டா, துஹின்மேனன் மற்றும் குருசோமசுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு லிடியன் நாதஸ்வரம் இசையமைக்கிறார். இதன் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2021-ல் தொடங்கியது.கொரோனா ஊரடங்கின் போது இந்த படத்தின் திரைக்கதை மற்றும் நடிகர்கள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டது.

மோகன்லாலும் டி.கே.ராஜீவ் குமாரும் இணைந்து காட்சிகள், கதாபாத்திரங்களை மாற்றி அமைத்தனர். அதன்பின் டிசம்பர் 2021-ல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. பெரும்பாலான படப்பிடிப்பு கொச்சி, கோவா பகுதியில் நடந்தது. 2 பாடல்கள் பாங்காக் மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டன. இப்படம் 3டியில் எடுக்கப்பட்டு உள்ளது. இந்தபடம் டிசம்பரில் வெளியாகும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here