தாப்பா:
பீடோர் குடிநுழைவு தடுப்பு மையாயத்திலிருந்து தப்பிச் சென்ற மேலும் 10 ஆண் கைதிகள் கம்போங் சென்டாவில் உள்ள செம்பினைத் தோட்டத்தில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் போலீசார் கைது செய்தனர்.
இந்த கைது மூலம் நேற்று மாலை 6.30 மணி நிலவரப்படி, தப்பியோடிய 131 பேரில் மொத்தம் 51 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று, பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி கூறினார்.
























