செயற்கை மழை பொழிவிக்கும் திட்டமில்லை -சுற்றுச்சூழல் அமைச்சு

கோலாலம்பூர்:

லேசியாவில் நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமாகி வருகிறது. அதைச் சமாளிக்கச் செயற்கை மழை பொழிய வைக்க முயற்சி மேற்கொள்ளுதல், பள்ளிகளை மூடுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சு கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இந்நிலையில், தாம் தொடர்ந்து காற்றின் தரத்தைக் கண்காணித்து வருவதால் செயற்கையாக மழை பொழிய வைக்கும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை.

மேலும், 24 மணி நேரத்திற்கும் மேலாக காற்றுத் தூய்மைக்கேடுக் குறியீடு 150க்குமேல் இருக்கும் பகுதிகளில் மட்டுமே செயற்கை மழை பொழிய வைக்கும் திட்டம் மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு இயற்கை வள, சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றத் துறைகளுக்கான அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமட் கூறியுள்ளார்.

“செயற்கையாக மழை பொழிய வைக்கும் திட்டம் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே மேற்கொள்ளப்படும். மேலும், நாங்கள் காற்றின் தரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்,” என்று அவர் சொன்னார்.

“தேசிய புகைமூட்டச் செயல்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் உள்ளிட்ட மற்ற அமைப்புகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அத்திட்டம் பட்டியலிடுகிறது,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

காற்றுத் தூய்மைக்கேடடுக் குறியீடு கோலாலம்பூரின் செராஸ் பகுதியில் 153ஆகவும் நீலாய் பகுதியில் 154ஆகவும் பதிவாகியிருந்ததாக மலேசியாவின் வானிலை நிலைய இணையத்தளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை 7 மணிக்கு வெளியான அறிக்கை தெரிவிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here