ஜோகூர் மாநில பாரிசான் நேஷனல் தலைவராக டத்தோ ஓன் ஹபிஸ் நியமனம்

கோலாலம்பூர்:

ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபீஸ் காசி மற்றும் திரெங்கானு அம்னோ இணைப்புக் குழுத் தலைவர் டத்தோ ரோசி மாமத் ஆகியோர் முறையே ஜோகூர் மற்றும் திரெங்கானு மாநில பாரிசான் நேஷனல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று நடந்த பாரிசான் நேஷனலின் உச்ச மன்றக் கூட்டத்தில் இந்த முடிவு ஒருமனதாக எட்டப்பட்டதாக, பாரிசான் நேஷனலின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் கொண்டாடப்படும் BN பொன்விழா ஆண்டு விழாவுடன் இணைந்து, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க ஒரு சிறப்புக் குழுவை அமைக்க கூட்டணியின் உச்ச மன்ற கூட்டத்தில் ஒப்புக்கொண்டதாகவும் ஜாம்ப்ரி கூறினார்.
இதற்கிடையில், ஜனவரி 31 அன்று மலேசியாவின் 17 வது மன்னராக பதவியேற்ற மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிமுக்கு பாரிசான் நேஷனலின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் ஜாம்ப்ரி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here