ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் அழைப்புக் மையத்தில் அதிரடி சோதனை: 13 பேர் கைது

கோலாலம்பூர்,

ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் அழைப்புக் மையமாக செயல்பட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு அலுவலகத்தை போலீசார் நேற்று சோதனை செய்தனர். இது ஜாலான் கியா பெங் பகுதியில் உள்ள ஒரு அடுக்ககத்தின் 23வது மாடியில் இருந்தது.

குறித்த சோதனையில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் எட்டு பேர் உள்ளூர் ஆண்கள், மூவர் உள்ளூர் பெண்கள் மற்றும் இருவர் சீனாவைச் சேர்ந்தவர்கள் எனத் கோலாலம்பூரின் செயற்குழுப் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசுப் ஜான் முகமட் தெரிவித்தார்.

‘Op Dadu’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக நண்பகல் 12 மணியளவில் துவங்கிய இந்த சோதனையில் Gambling and Corrupt Practices Crime Investigation Division மற்றும் டாங் வங்கி மாவட்ட போலீஸ் தலைமையக பிரிவும் களமிறங்கியுள்ளது..

“இந்த அழைப்பு மையம் முக்கியமாக இந்தோனேசியா சந்தையை நோக்கி இயக்கப்பட்டது. பணியாளர்கள் மாதம் RM3,000 முதல் RM4,000 வரையிலான சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டனர்” என அவர் கூறினார்.

இந்த சோதனையின் போது 14 கணினிகள், இரண்டு மடிக்கணினிகள், ரவுடர்கள் மற்றும் பதிவு இயந்திரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறினார்.

இந்த சூதாட்ட குழு கடந்த ஏப்ரல் மாத ஆரம்பத்தில் இருந்து காலை 11 மணி முதல் மாலை 8 மணி வரை தினமும் செயல்பட்டு வந்ததாக நம்பப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here