RM16,000 ஊழல் வழக்கு: பெண் அரசு ஊழியருக்கு 4 நாட்கள் தடுப்புக் காவல்

கோலாலம்பூர்:

லேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மாவட்ட மற்றும் நில அலுவலகங்களில் ஒன்றில், நிலப் பிரிவின் ஒப்புதலுக்காக சுமார் RM16,000 லஞ்சம் கேட்டு பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் பெண் அரசு ஊழியர் ஒருவருக்கு தடுப்பு காவல் உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை கோல சிலாங்கூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், குறித்த பெண்ணை MACC தடுப்பு காவலில் வைக்க விண்ணப்பித்ததை அடுத்து, இன்று தொடங்கி பிப்ரவரி 10 வரை நான்கு நாட்கள் காவலில் வைப்பதற்கு மாஜிஸ்திரேட் சித்தி ஹஜர் அலி ஒப்புதல் வழங்கினார்.

40 வயதுடைய பெண் சந்தேக நபர் நேற்று பிற்பகல் 2 மணியளவில் கோலா சிலாங்கூர் MACC அலுவலகத்தில் சாட்சியமளிக்க வந்தபோது, கைது செய்யப்பட்டதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

“சந்தேக நபர், அங்குள்ள மூன்று நில உரிமையாளர்களிடம் லஞ்சப் பணம் கேட்டு பெற்றதாக நம்பப்படுகிறது.

“சந்தேக நபர் 2022 ஆம் ஆண்டில் 16,000 ரிங்கிட் லஞ்சம் கோரி, அவரது தனிப்பட்ட கணக்கில் டெபாசிட் செய்ததாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது”.

இதற்கிடையில், சிலாங்கூர் MACC இயக்குநர் டத்தோ அலியாஸ் சலீமைத் தொடர்பு கொண்டபோது, ​​அவர் குறித்த பெண் கைது செய்யப்பட்டதை உறுதிசெய்ததுடன், MACC சட்டம் 2009 இன் பிரிவு 16 (ஏ) (பி) இன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டதாகக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here