கடந்த இரு வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட Op Selamat நடவடிக்கையின்போது 3,440 புகார்கள் பதிவு- JPJ

ஈப்போ:

பிப்ரவரி 1 முதல் நேற்று (பிப்.14) வரை சீன புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்து நடாத்தப்பட்ட Op Selamat நடவடிக்கையின்போது, MyJPJ e-aduan@jpj பயன்பாடு மற்றும் அதன் மின்னஞ்சல் aduantrafik@jpj.gov.my மூலம், பல்வேறு சாலைக் குற்றங்கள் தொடர்பாக பொதுமக்களால் அனுப்பப்பட்ட சுமார் 3,440 புகார்களை சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) பதிவு செய்துள்ளது.

அவசரகாலப் பாதையைப் பயன்படுத்தியதற்காகவும், சிவப்பு விளக்கை அடித்ததற்காகவும், இரட்டைக் கோடுகளில் முந்திச் சென்றதற்காகவும் அதிக எண்ணிக்கையிலான குற்றங்கள் பதிவாகியுள்ளன என்று, JPJயின் மூத்த இயக்குநர் (அமலாக்கம்), டத்தோ லோக்மான் ஜமான் கூறினார்.

நாடு முழுவதும் இந்த நடவடிக்கையை அமல்படுத்தியதில், பல்வேறு சாலைக் குற்றங்களுக்காக மொத்தம் 27,339 சம்மன்கள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here