கிளந்தான் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட நடவடிக்கையில் 34 சட்டவிரோத குடியேறிகள் கைது

கோத்தா பாரு:

கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் மேற்கொள்ளப்பட்ட Ops Sapu மற்றும் Ops Kutip நடவடிக்கையின் கீழ், கோத்தா பாரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தம் 34 சட்டவிரோத குடியேறிகளை கிளந்தான் குடி நுழைவுத் துறை கைது செய்துள்ளது.

காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த நடவடிக்கையின் மூலம், 16 அமலாக்க அதிகாரிகள் மொத்தம் 40 வெளிநாட்டினரை சோதனையிட்டதாக கிளந்தான் குடி நுழைவுத்துறை இயக்குனர் முகமட் பைசல் ஷம்சுதீன் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 23 ஆண்கள், 4 பெண்கள், 2 சிறுவர்கள் மற்றும் 5 பெண்கள் ஆகியோர் அடங்குவர்.

“அவர்களில் இந்தோனேசியா, கம்போடியா, மியன்மார், வங்காளதேசம், இந்தியா மற்றும் தாய்லாந்து போன்ற பல நாடுகளைச் சேர்ந்தவர்கள்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அல்லது அந்தந்த பகுதிகளில் வெளிநாட்டவர்களால் மேற்கொள்ளப்படும் ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த தகவல் தெரிந்தவர்கள் தமக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களை முகமட் பைசல் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here