கோலாலம்பூர்:
நீர் விநியோகத்தில் சீரான மற்றும் நிலைத்தன்மையை உருவாக்குவதிலும், நுகர்வோரின் நல்வாழ்வுக்காக அதன் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதிலும் பொறுப்புடன் செயல்படுவதாக
ஆயிர் சிலாங்கூர் உறுதியளித்துள்ளது.
பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வந்த மாற்றியமைக்கப்பட்ட நீர் கட்டணங்களைத் தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டில் ஆயிர் சிலாங்கூர் பல்வேறு முதலீட்டு முயற்சிகளை இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின் மூலம் அறிவித்தது.
“இந்த முயற்சிகளில் குழாய்களை மாற்றுவதும் அடங்கும். அதாவது குழாய் மாற்றீட்டினை 150 கிலோமீட்டரில் இருந்து 300 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது, இதில் 15 வருடத்திற்க்கு பழமையான உள்கட்டமைப்பினை மாற்றுவது தொடர்பில், சுமார் 5,000 கி.மீ குழாய்கள் 2040 ஆம் ஆண்டிற்குள் மாற்றப்படுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.