மோட்டார் சைக்கிளில் நாயைக் கட்டிச் சாலையில் இழுத்துச் சென்ற ஆடவருக்கு RM12,000 அபராதம்

புக்கிட் மெர்தாஜாம்:

மோட்டார் சைக்கிளுடன் நாயைக் கட்டிச் சாலையில் இழுத்துச் சென்ற 46 வயது ஆடவர் ஒருவருக்கு, ஒரு நாள் சிறைத் தண்டனையும், RM12,000 அபராதமும் விதித்து, மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

நவம்பர் 21, 2023 அன்று நள்ளிரவு 12.06 மணியளவில் தாமான் சுகுன் இண்டாவில், மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி 182cm நீளமான சங்கிலியால் நாயைச் சாலையில் இழுத்து வலியை ஏற்படுத்தியதாக தான் சீ கியோங் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர், தான் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, புக்கிட் மெர்தாஜாம் மாவட்ட நீதிமன்றம் இந்த தண்டணையை விதித்தது.

RM12,000 அபராதத் தொகையை அவர் செலுத்தாதுவிடில், அவர் ஆறு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here