திரெங்கானுவில் 1,431 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்

கோலா திரெங்கானு:

நேற்று கோலா நெராஸ் மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திரெங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதிய மாவட்டமாக மாராங் பதிவாகியுள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி, 400 குடும்பங்களைச் சேர்ந்த 1,431 பேர் கோலா நெராஸ், கோலா திரெங்கானு, செத்தியூ மற்றும் மாராங் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள 14 வெள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய வானிலை நிலவரப்படி திரெங்கானுவில் சில இடங்களில் மழை இன்னும் பெய்து வருகிறது என்று திரெங்கானு மாநில பேரிடர் மேலாண்மைக் குழு (JPBN) செயலகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் இன்னும் மழை பெய்துகொண்டிருப்பதால் மேலும் அதிகமான நிலையங்கள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, வெள்ளம் காரணமாக கோலா திரெங்கானுவில் மூன்று பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக திரெங்கானு மாநிலக் கல்வித் துறை துணை இயக்குநர் அஸ்மான் ஒத்மான் கூறினார்.

பள்ளிக்குச் செல்லவேண்டாம் என்று மாணவர்களிடம் கூறப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து கற்கும் முறையைப் பின்பற்றுமாறு அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here