நகராண்மைக்கழக உறுப்பினர்  சுழற்கிண்ண ஃபுட்சால் போட்டி

 

பத்தாங் காலி பி.கே.பிரதர்ஸ் ஏற்பாட்டில்  உலு சிலாங்கூர் நகராண்மைக்கழக உறுப்பினர் சுழற்கிண்ண ஃபுட்சால் போட்டி சிறப்பாக நடைபெற்றது. நகராண்மைக்கழக உறுப்பினர் பி. ராஜேஷ்ராவ் பெயரைக் கொண்ட  இப்போட்டியில் மொத்தம் 16 குழுக்கள் பங்கேற்றன.

கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி ராசா தாம்பாஹான் ஃபுட்சால் மையத்தில் இப்போட்டி  நடைபெற்றது.  போட்டியின் முதல் பரிசை செலாயாங்கைச் சேர்ந்த Explode Fc அணியினர் தட்டிச் சென்றனர். அக்குழுவிற்கு 800 ரிங்கிட் ரொக்கம், சுழற்கிண்ணம், பதக்கம்வழங்கப்பட்டன.

இரண்டாவது இடத்தை பிடித்த ரவாங்கைச் சேர்ந்த Kpkc Fc 400 ரிங்கிட் ரொக்கம் பரிசு வழங்கப்பட்டது.

மூன்றாவது நிலையில் வெற்றி பெற்ற பத்தாங் காலியைச் சேர்ந்த பி.கே.பிரதர்ஸ் – Bk Myg ஆகிய அணிகள் தலா 200 ரிங்கிட் ரொக்கம், பதக்கங்களை வென்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு ராஜேஸ் ராவ் பரிசுகளை எடுத்து வழங்கினார்.

இந்திய இளைஞர்களை நல்வழிப்படுத்த விளையாட்டு சிறந்த ஒரு தளமாகும். ஒவ்வொரு இடத்திலும் இருக்கக்கூடிய பிரதிநிதிகள்   விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்து அதன் மூலம் இளைஞர்களை ஒன்றிணைக்க வேண்டும். விளையாட்டில் ஈடுபடச் செய்தால் இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்வதை  தடுக்க முடியும் என ராஜேஸ் ராவ் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here