புக்கிட் மெர்தாஜாம்:
நேற்று ஜாலான் அரோவானா, செபெராங் ஜெயாவில் நடத்தப்பட்ட சாலைப்பாதுகாப்பு நடவடிக்கையின் போது மொத்தம் 162 சம்மன்களை பினாங்கு சாலைப் போக்குவரத்துத் துறை வழங்கியது.
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இந்த நடவடிக்கை 3 மணி நேரம் நடத்தப்பட்டது என்றும், இதன்போது மொத்தம் 410 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு அவற்றில் 92 வாகனங்கள், சாலைச்சட்டங்களுடன் தொடர்புடைய பல்வேறு குற்றங்களுக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
“செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், காலாவதியான மோட்டார் வாகன உரிமம், காப்பீட்டுத்தொகை இல்லாதது, வண்ணக் கண்ணாடிகள் மற்றும் அனுமதியின்றி வாகனத்தை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 162 சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன” என்று, பினாங்கு JPJ இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.