உலக எண்ணெய் விலை உயர்வு: மக்களைப் பாதுகாக்க RON95 உச்சவரம்பு விலை நிலைநிறுத்தம் – நிதி அமைச்சகம்

கோலாலம்பூர்:

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், RON95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு RM2.05 என்ற உச்சவரம்பில் தொடர்ந்தும் பராமரிக்கப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், உலகக் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை அரசு தொடர்ந்து கவனித்து வருவதாகவும், மக்களின் நலனை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், உலக சந்தை நிலவரத்தின் பேரில் எதிர்கால விலை மாற்றங்களை அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்கவுள்ளதாகவும், மக்கள் நலனுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சகம் உறுதிபட தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here