கிள்ளான்:
பண்டார் பாரு கிள்ளான் பகுதியில் காணாமல் போனதாகக் கூறப்படும் லோரியை, கோலாலம்பூரின் ஜின்ஜாங் பகுதியில் விட்டுவிட்டு சந்தேக நபர் தப்பிச் சென்றதாக நம்பப்படுகிறது.
பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் ரோந்து பிரிவு உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் லோரியை கண்டுபிடித்ததாக வட கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் எஸ் விஜய ராவ் தெரிவித்தார்.
“ரோந்து பிரிவினர் சம்பந்தப்பட்ட லோரியை நிறுத்த முயன்றனர், ஆனால் சந்தேக நபர் ஜின்ஜாங் பகுதிக்கு தப்பித்து சென்றதாகவும், அவர் குறித்த வாகனத்தை விட்டுவிட்டு தப்பித்து ஓடிவிட்டனர் என்றும், லோரி மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.


















