பஹாவ்:
ஒரு மருத்துவர் தனது கிளினிக்கில் வேலைபார்க்கும் ஊழியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் முஹமட் அமின் ராசாலி, 36, தனது 25 வயதான பெண் ஊழியரின் மானத்திற்கு பங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் அவ்வாறு செய்ததாக அவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் குறித்த டாக்டர் தான் குற்றவாளி அல்ல என்று கூறி, விசாரணை கோரினார்.
பிப்ரவரி 19 அன்று இரவு 10.30 மணியளவில் இங்கு அருகிலுள்ள பண்டார் பாரு செரிங்கில் உள்ள தனது கிளினிக்கில் இந்தக் குற்றத்தைச் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனைச் சட்டத்தின் 354 வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார், இது குறேஅம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது பிரம்படி அல்லது அபராதம் அல்லது ஏதாவது இரண்டு தண்டனையாக விதிக்கப்படலாம்.
குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டவரை தொடர்பு கொள்ளவோ அல்லது துன்புறுத்தவோ கூடாது என்றும் கூறிய நீதிபதி, சந்தேக நபரை 5,000 ரிங்கிட் ஜாமினில் செல்ல அனுமதி வழங்கினார்.
வழக்கு மீண்டும் ஏப்ரல் 29ஆம் தேதி செவிமடுக்கப்படும்.


















