தமிழகத்தில் தொடங்கியது வேட்புமனு தாக்கல்!

சென்னை:

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

7 கட்டமாக நடைபெறவுள்ள தேர்தலில், முதற்கட்டமாக தமிழகம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் இன்று காலை 11 மணி முதல் வேட்மனு தாக்கல் செய்யலாம்.

வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 27-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர், மார்ச் 28-ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனு வாபஸ் பெற மார்ச் 30-ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இதனை தொடர்ந்து ஏப்ரல் 19-ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here