பெட்டாலிங் ஜெயா | மார்ச் 08, 2026:
சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டுக்கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையதாக, இரண்டு உயர்மட்ட அதிகாரிகள் உட்பட மூன்று அரசு ஊழியர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற்ற ஒரு கூட்டுக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டது என சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் கம்மிஷனர் டத்தோ ஷாசெலி கஹார் கூறினார்.
கடந் மார்ச் 2-ஆம் தேதி முதல் சிலாங்கூர் மற்றும் கோம்பாக் காவல்துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் மொத்தம் 6 உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களில் மூன்று பேர் அரசு ஊழியர்கள். இவர்களில் இருவர் உயர்மட்ட அதிகாரிகள் (Senior Officers), ஒருவர் கீழ்நிலை ஊழியர் என்றும், மற்ற மூவர் பொதுமக்கள் ஆவர். இதில் ஒரு நபர் மீது ஏற்கனவே 20 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு சொகுசு கார் (Luxury Car) உள்ளிட்ட சில வாகனங்கள், “Police” என்று எழுதப்பட்ட மூன்று சீருடை மேலங்கிகள் (Vests), RM1,498 ரொக்கப் பணம் என்பன கைப்பற்றப்பட்டன.
தற்போது கைதான 6 பேரும் மார்ச் 8-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் (Remand) வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
“இந்தச் சம்பவத்தில் காவல்துறையைச் சேர்ந்தவர்களே சம்பந்தப்பட்டிருந்தாலும், எவ்வித சமரசமுமின்றி வெளிப்படையான விசாரணை நடத்தப்படும். சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என டத்தோ ஷாசெலி கார் உறுதி அளித்துள்ளார்.













