PADU தரவுத்தளத்தில் பதிவு செய்வதற்கான இறுதிநாள் மார்ச் 31; நீடிக்கப்பட வேண்டும் -பொருளாதார நிபுணர்கள்

ஷா ஆலாம்:

த்திய தரவுத்தளமான PADU பதிவுக்கான காலக்கெடு மார்ச் 31 இல் முடிவடைகிறது. இந்த காலக்கெடு நீடிக்கப்பட வேண்டும் என்று புத்ரா வணிகப்பள்ளியின் பொருளாதார ஆய்வாளர், பேராசிரியர் டாக்டர் அஹ்மட் ரஸ்மான் அப்துல் லத்தீஃப் கூறியுள்ளார்.

காலக்கெடுவுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், இதுவரை பதிவு செய்யாத மக்கள் தங்கள் தகவல்களை விரைவாக பதிவு செய்வது அல்லது புதுப்பிப்பது முக்கியம் என்று கூறிய அவர், அரசு மானியங்கள் அல்லது உதவிகள் PADUவில் பதிவு செய்யதவர்களுக்கு கிடைப்பதில் பெரும் தாமதம் ஏற்படக்கூடும் அல்லது அவை கிடைக்காதுவிடவும் கூடும்.

“எனவே, இதுவரை பதிவு செய்யாதவர்கள், அரசு உதவிகளை இழக்காமல் இருக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

அத்தோடு PADU வில் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் முயற்சிகளை அரசாங்கம் தீவிரப்படுத்த வேண்டும் என்றார் ரஸ்மான். குறிப்பாக வணிக வளாகங்கள், ரமலான் பஜார் மற்றும் மசூதிகள் போன்ற அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் அவற்றுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

கோலாலம்பூர் பல்கலைக்கழக வணிகப் பள்ளியின் பொருளாதார ஆய்வாளர் இணைப் பேராசிரியர் ஐமி சுல்ஹாஸ்மி அப்துல் ரஷித் கூறுகையில், பதிவுக்கான காலக்கெடுவை நீட்டிப்பது பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை தாமதப்படுத்துவது மட்டுமல்லாமல், நாட்டின் நிதிச் செலவினங்களில், குறிப்பாக நாட்டின் கடனில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு மூலம், இதுவரை பதிவு செய்யாதவர்களை PADU வில் சேர்க்க அரசாங்கம் இன்னும் தீவிரமாக இருக்க வேண்டும். உதாரணமாக பல்கலைக்கழக மாணவர்களை, குறிப்பாக B40 மற்றும் M40 பகுதிகளில், பதிவுக்கு உதவ பயன்படுத்திக்கொள்ளலாம். அவர்களுக்கு இ-வவுச்சர்கள் போன்ற ஊக்கத்தொகைகளை வழங்கலாம் என்றார்.

முன்னதாக, PADU பதிவுக்கான மார்ச் 31 காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என்று பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here