கெடா சுங்கத்துறையால் சுமார் மூன்றரை இலட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 10.5 கிலோ சியாபு பறிமுதல்

அலோர் ஸ்டார்:

டந்த புதன்கிழமை, கெடா மாநில சுங்கத் துறை கோத்தா கோல மூடாவில் மேற்கொண்ட சோதனையில், RM347,000 மதிப்புள்ள 10.5 கிலோகிராம் எடையுள்ள சியாபு வகை போதைப் பொருட்கள் கடத்தும் முயற்சியை முறியடித்துள்ளது.

தஞ்சோங் தாவாய், சுங்கை பட்டாணி கடல்சார் அமலாக்க அதிகாரிகள் குழு கண்காணிப்பு மற்றும் உளவு நடவடிக்கையை மேற்கொண்டபோது, மாலை 6.30 மணியளவில் சந்தேகத்திற்கிடமான படகைக் கண்டறிந்ததாக அதன் இயக்குநர் நோர் இசா அப்துல் லத்தீஃப் தெரிவித்தார்.

“ரோந்து நடவடிக்கை குழு குறித்த படகை இடைமறித்தது, இருப்பினும் சட்ட அமலாக்கப் பணியாளர்கள் இருப்பதைக் கவனித்த சந்தேக நபர் ஆற்றில் குதித்து, தப்பித்தார் ” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் சோதனையின் விளைவாக, படகின் சேமிப்பு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பையில், 10 பழுப்பு நிற பொட்டலங்களை கண்டுபிடித்ததாக அவர் கூறினார்.

“இந்த போதை மருந்துகள் சட்டவிரோதமாக கடல் வழியாக அண்டை நாடான இந்தோனேசியாவிற்கு படகுகள் மூலம் கொண்டு செல்ல முயற்சித்ததாக நம்பப்படுகிறது.,” என்று அவர் சொன்னார்.

தப்பித்த சந்தேக நபரை தேடுவதுடன், படகின் உரிமையாளரைக் கண்டுபிடிக்க விசாரணை தொடர்கிறது என்று இசா கூறினார்.

எனவே, கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பான எந்த தகவலையும் 1-800-88-8855 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது அருகில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க பொதுமக்களுக்கு அவர் அழைப்புவிடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here