ஆஞ்சநேயர் கவசம் :

துன்பங்களை போக்கி, ஆரோக்கியத்தை தரும் அற்புத மந்திரம்

ஸ்ரீராம பிரானின் தீவிர பக்தரான ஆஞ்சநேயர், வீரம், உடல் பலம், வெற்றி ஆகியவற்றை வழங்கும் தெய்வமாக கருதப்படுகிறார். சனி பகவானால் பிடிக்க முடியாத தெய்வ ம் என்பதால் ஆஞ்சநேயரை வழிபட்டால் எந்த கிரகத்தால் ஏற்படும் எந்த தோஷமும் எதுவும் செய்யாது. ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு கவசப் பாடல் இருப்பது போல் ஆஞ்சநேயருக்கும் கவசப் பாடல் உள்ளது. இதை அனுமனுக்குரிய சனிக்கிழமை, அமாவாசை, மூல நட்சத்திரம் வரும் நாட்களில் பாராயணம் செய்து வழிபட்டு வந்தால், எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலுமக் வா்க்கையில் இருந்து விலகி விடும். நெருக்கடியான சூழ்நிலையில் கூட இந்த கவசம், நம்மை கவசம் போல் இருந்து காக்கும்.

துதிப்பயன் :
அஞ்சனை மைந்தன் அனுமனை போற்றிடின்
நெஞ்சினில் பலம் வரும் வஞ்சனை போக்கிடும்
வாயுவின் புத்திரனால் வல்வினை நோய் தீரும் நிஜம்.

அனுமன் கவசம் பாடல் வரிகள் :
சிரஞ்சீவி அனுமன் என் சிரசினை காக்க ஸ்ரீராம பக்தன்
என் சீர் சடை காக்க நெறி மேவி நின்றவன்என் நெற்றியை காக்க புவியினில் நீண்டவன் என் புருவங்கள் காக்க இமயத்தில் நிற்பவன் என் இமைகளைக் காக்க சமயத்தில் வந்தெனை சடுதியாய் காக்க வீரத்தின் வீரன் என் விழிகளைக் காக்க வீசிடும் காற்றோன் என் விழிமூடிகளைக் காக்க நாரணப் பிரியன்என் நாசியை காக்க  காரணப் பொருளே என் காலமே காக்கமுழுஞானம் கொண்டவன்என் மூக்கினை காக்வாக்கிலே வல்லவன் என் வாயினை காக்கவெற்றிலை பிரியன்என் வெற்றியை காக்க பற்றியே வந்தெனை பற்றுடன் காக்க பல் வித்தை கற்றவன் என் பற்களைக் காக்க  நல் மனம் கொண்டவன்என் நாவினைக் காக்க நாடியே வந்தென்றன் நாடியை காக்க தேடியே வந்தென்னை தேவனே காக்க கரிமலை கடந்தவன் என் கன்னங்கள் காக்ககடுகதியில் வந்தே என் கழுத்தினை காக்ககயிலையின் வாசன் என் கைகால்கள் காக்க கதிரவனின் மாணவன் கருணையாய்க் காக்க நல்லருள் செய்பவன் என் நகங்களைக் காக்க அல்லன அழிப்பவன்என் அகம் தனை காக்க நெடு மேனியானவன் என் நெஞ்சினைக் காக்க சுடு அக்னி வென்றவன் என் சூட்சுமம் காக்க இடுக்கண் களைபவன் என் இடுப்பினை காக்க இரு கண்ணின் மணிகளை இருட்டிலும் காக்க தோள் வலிவு கொண்டவன் என் தோள்களை காக்க தோன்றிய புகழவன்என் தொடைகளைக் காக்க குரங்கினத் தலைவன் என் குறியினைக் காக்க குருவாகி வந்துஎன் குருதியை காக்க திசையெல்லாம் திரிந்தவன் என் தசையினை காக்க விசையென்ப பாய்ந்து என் செவிகளை காக்க ஒன்பது வாசலை ஒப்பிலான் காக்க புண்படா வண்ணம் புண்ணியன் காக்க இளமையும் முதுமையும் இனியவன் காக்க இரவிலும் பகலிலும் இமையெனவே நீ காக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here