இந்த சின்னத்துக்கு ஓட்டு போடாதீங்க: அப்புறம் பிரச்சினைதான் – விஜய் ஆண்டனி

திருச்சி: விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் ஓட்டு போடுவது தொடர்பான கேள்விக்கு இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வலம் வந்தவர் விஜய் ஆண்டனி. அதன்பிறகு நடிப்பில் ஆர்வம் காட்டி தற்போது நடிகராக இருக்கிறார். இந்நிலையில் தான் விஜய் ஆண்டனி நடித்துள்ள ரோமியோ எனும் திரைப்படம் வரும் ஏப்ரல் 11ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் ப்ரோமேஷன் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு பல்வேறு மாவட்டங்களில் நடந்து வருகிறது. கேகாவையை தொடர்ந்து திருச்சியில் நேற்று ப்ரோமேஷன் நிகழ்ச்சி நடந்தது. இதில் விஜய் ஆண்டனியுடன் நடிகை மிருணாளினி பங்கேற்றார். இந்த வேளையில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு நடிகர் விஜய் ஆண்டனி பதிலளித்தார். இந்த சமயத்தில் வரும் லோக்சபா தேர்தல் தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதாவது பத்திரிகையாளர் ஒருவர், ‛‛விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. வாக்காளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் அறிவுரை என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு விஜய் ஆண்டனி, ‛‛மக்களுக்கு 5 ஆண்டுக்கு ஒரு முறை கிடைக்க கூடிய ஆயுதம் தான் தேர்தல். இந்த நேரத்தில் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். ஒரு அரை மணிநேரம் யோசித்து பாருங்கள். என்னை கேட்டால் தனிப்பட்ட முறையில் நான் நோட்டாவுக்கு ஓட்டுப்போடுவதை வரவேற்பது இல்லை. வொஸ்ட்டில் பெஸ்ட் என்று ஒன்று இருக்கும். எல்லோரும் நோட்டாவுக்கு ஓட்டுப்போட்டால் நாட்டை யார் தான் ஆளப்போகிறார்கள்.

கண்டிப்பா பெஸ்ட்னு ஒருவரை தேர்வு செய்து அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். குறைந்தபட்சம் வாக்கு சதவீதம் என்பது 90 சதவீதம் வரை ஆக வேண்டும். தற்போது 60 சதவீதம் என்ற அளவில் தான் ஓட்டு சதவீதம் உள்ளது. இதனை 90 சதவீதமாக ஆக்க வேண்டும். அதை செய்யாமல் குத்துதே, குடையுதே.. நாடு சரியில்லையே என்று சொல்லக்கூடாது” என்றார்.

அதாவது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் இருப்பதை போல் நோட்டா எனும் சின்னம் இருக்கும். தொகுதியில் யாருக்கும் ஓட்டளிக்க விரும்பாத நிலையில் நோட்டாவுக்கு நாம் வாக்கு செலுத்தலாம். ஆனால் நோட்டாவில் பதிவாகும் வாக்கு என்பது வெறும் எண்ணிக்கை அடிப்படையிலானது தான். இந்த நோட்டாவில் ஓட்டு பதிவு செய்வது என்ப தேர்தலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here