கருணாநிதியின் காணொலி காட்சி அரங்கத்தை மூட வேண்டும்- தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க. புகார்

அ.தி.மு.க. செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளருமான பாபு முருகவேல் தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் பற்றி புகார் கொடுத்துள்ளார்.தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் அவருடைய வாழ்க்கை வரலாற்றை விவரிக்கின்ற விதமாக அங்கே உள்ள காட்சியரங்கத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலான ஒலி ஒளி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அந்த ஒளிபரப்பை நிறுத்த வேண்டும். அந்த காணொலி அரங்கத்தை மூடி முத்திரையிட வேண்டும். மேலும் கருணாநிதி நினைவிடத்தில் இரவு நேரத்தில் இருக்கிற ஒலி அமைப்பு தி.மு.க.வின் சின்னத்தை பிரதிபலிப்பது போல் உள்ளது. அதை ஒளிராமல் நிறுத்த வேண்டும். மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் உள்ள அந்த ஒலி-ஒளி காட்சி அமைப்பை நிறுத்த வேண்டும் என்று இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here