மழைக்கால வடிகாலில் தவறி விழுந்து காணாமல் போன நான்கு வயது சிறுமியின் சடலம் மீட்பு

கோத்தா பெர்டானாவில் மழைக்கால வடிகாலில் தவறி விழுந்து காணாமல் போன நான்கு வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) காலை 8.17 மணியளவில் ஜாலான் புச்சோங்-சைபர்ஜெயாவுக்கு அருகிலுள்ள லோம்போங் டி’தீவில் குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக செர்டாங் காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் AAஅன்பழகன் தெரிவித்தார். உடலைக் கண்ட மக்கள் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். மழைக்கால வடிகாலில் ஐந்து பேர் கொண்ட குடும்பம் அடித்துச் செல்லப்பட்ட ஆரம்ப இடத்திலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அவரைத் தொடர்பு கொண்டபோது, தந்தை தனது இளைய குழந்தையின் சடலத்தை அடையாளம் காட்டினார் என்று அவர் கூறினார். பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக செர்டாங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31)  ஜாலான் கேபி 4/9 கோத்தா பெர்டானாவில் உள்ள ஓடைக்கு அருகில் ஐந்து பேர் கொண்ட குடும்பம் மழைக்கால வடிகாலில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 40 வயதுடைய தந்தையும் அவரது ஒன்பது வயது மகனும் உயிர் தப்பினர். குடும்பத்தின் 10 வயது மகனின் சடலம் ஞாயிற்றுக்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டதுடன், 38 வயதான தாயின் சடலம் திங்கள்கிழமை (ஏப்ரல் 1) பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here