இந்து மத அஷ்ட ஐஸ்வர்யங்கள்

வாழ்க்கையில் மாற்றம் வர வேண்டும், முன்னேற்றம் வர வேண்டும், வெற்றிகளும், செல்வங்களும் குவிய வேண்டும் என ஆசைப்படாதவர்கள் இருக்க முடியாது. இவை அனைத்தும் நடக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என இந்து மத சாஸ்திரங்கள் வழிகாட்டுகின்றன. 

அஷ்ட ஐஸ்வர்யங்களுடன், வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய 10 எளிமையான விஷயங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். 

இந்து மதம் சொல்லும் அஷ்ட ஐஸ்வர்யங்கள் :

எட்டு விதமான செல்வங்கள் இருப்பதாக இந்து மதம் சொல்கிறது. இந்த அஷ்ட ஐஸ்வர்யங்களும் மகாலட்சுமியுடன் மட்டும் தொடர்புடைய கிடையாது. மகாவிஷ்ணு, விநாயகர், குபேரர் ஆகியோருடனும் தொடர்புடையதாகும். அவற்றை பெறுவதற்கான 10 வழிகள் எவை என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

1. தனம் – பணம், தங்கம்
2. தான்யம் – உணவு தானியங்கள்
3. சந்தானம் – குழந்தைகள்
4. ஜெயம் – வாழ்க்கையில் பெறக் கூடிய வெற்றி
5. தைரியம் – வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு உறுதியுடன், கவனமாக செயல்படுவது.
6. ஆயுத பலம் – புத்திகூர்மை, திறமை ஆகியவற்றை ஆயுங்களாக கொண்டு செல்வத்தை சேர்ப்பது
7. ராஜ்யம் – சொத்துக்கள், பதவி
8. வாகனம் – போக்குவரத்திற்கு பயன்படுத்தும் கருவிகள்

தச லட்சணங்கள் :

இந்த அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெற வேண்டும் என்றால் அதற்கு தச லட்சணங்கள் தேவை. இந்த தச லட்சணங்கள் எவர் ஒருவரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். நம்மிடம் செய்யக் கூடிய இந்த சின்ன சின்ன மாற்றங்கள், வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்களை கொண்டு வரும் ஆற்றல் படைத்தவை. இந்த தச லட்சணங்கள் உங்களிடம் இருந்தால் மிகப் பெரிய வெற்றியை வாழ்க்கையில் பெற முடியும்.

1. நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியில் பொட்டு வைக்க வேண்டும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி எப்போதும் வெறும் நெற்றியுடன் இருக்கக் கூடாது. அதோடு காலை நேரத்தில் சந்தனத்துடன் குங்குமம் வைக்க வேண்டும். மாலை நேரம் என்றால் விபூதியுடன் குங்குமம் வைக்க வேண்டும்.

2. பெண்கள் எப்போதும் நேர் வகிடு எடுத்து தலைவார வேண்டும். ஆண்கள் பக்கவாட்டில் வகிடு எடுத்து தலைவார வேண்டும். அடிக்கடி தலையில் கை வைத்து முடியை தொடக் கூடாது.

3. தினந்தோறும் நல்ல சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். ஒரே ஆடையை இரண்டு, மூன்று நாட்கள் தொடர்ந்து அணியக் கூடாது. ஆடைகளில் லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். இதனை வஸ்திர லட்சுமி என்ற சொல்லுவதுண்டு. அதனால் தான் புதிய ஆடைகள் வாங்கினால் அவற்றிற்கு மஞ்சள் தொட்டு வைத்து, பயன்படுத்தும் முறை இந்து சாஸ்திரத்தில் உள்ளது.

4. நல்ல வாசனை திரவியங்களை பூசிக் கொள்வது. இந்த வாசனாதி தைலங்களுக்கு நல்லவற்றை ஈர்க்கும் தன்மை உண்டு. இதனால் மனதில் புத்துணர்ச்சியும், பாசிடிவ் எண்ணங்களும் ஏற்படும். அதனால் தான் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யும் போது கூட சந்தனம், ஜவ்வாது, புனுகு போன்ற வாசனாதி தைலங்களை கொண்டு அபிஷேகம் செய்வதுண்டு. இவற்றிற்கு பாசிடிவ் எனர்ஜியை தரும் ஆற்றல் உண்டு.

5. பெண்கள் எப்போதும் தலையில் பூ வைத்துக் கொள்வது நல்லது. குறிப்பாக மல்லிகைப்பூ போன்ற வாசனை மலர்களை வைத்துக் கொள்ள வேண்டும். கோவிலுக்கு செல்லும் போது முடியை கட்டி இருக்க வேண்டும்.

6. சனிக்கிழமையில் தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்க வேண்டும். உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் கெட்ட விஷயங்கள் அனைத்தும் நீங்கி விடும்.

7. வெள்ளிக்கிழமையில் வாசல் பூஜை செய்வது சிறப்பு. இதனால் வீட்டில் மிகப் பெரிய ஐஸ்வர்ய வளம் ஏற்படும்.

8. இல்லை என்ற வார்த்தை எப்போதும் பயன்படுத்தாதீர்கள். நிஜமாகவே உங்களிடம் அந்த பொருள் இல்லை என்றாலும் குறைவாக இருக்கிறது அல்லது வேறு இடத்தில் இருக்கிறது என பாசிடிவ்வான வார்த்தைகளை சொல்லி பழகுங்கள்.

9. வீட்டில் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்றுங்கள். மகாலட்சுமியை பூஜை செய்யுங்கள்.

10. குலதெய்வத்தை தினமும் பத்து முறையாவது நினைத்து வணங்குங்கள். தாய், தந்தையிடம் காலில் விழுந்து ஆசி வாங்குங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here