சிட்னியில் வெள்ள அபாயம்!

சிட்னி:

ஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பெய்து வரும் கனமழையால் அங்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சிட்னியில் உள்ள சில பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களை அங்கிருந்து வெளியேறி மேட்டுப் பகுதிகளுக்குச் செல்லுமாறு ஆஸ்திரேலிய அதிகாரிகள் இன்று (ஏப்ரல் 6) வலியுறுத்தினர்.

சிட்னியில் உள்ள சில பகுதிகளில் வெள்ள நீர் அபாயகரமான முறையில் பெருக்கெடுத்து ஒடுவதாக அதிகாரிகள் கூறினர்.

கிட்டத்தட்ட 44 பேர் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் உதவி கேட்டு 4,128 அழைப்புகள் கிடைத்ததாகவும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் அவசரகாலச் சேவை அதன் இணையப்பக்கத்தில் தெரிவித்தது.

பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மீட்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களுடன் மீட்புப் பணியாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here