அடுத்தடுத்து நிலநடுக்கம்.. காஷ்மீர், ராஜஸ்தானில் பீதியில் உறைந்த மக்கள்

ஜெய்ப்பூர்: ஜம்மு காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் பாலியில் நள்ளிரவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர்.இந்தியா உள்பட பல நாடுகளில் தற்போது அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக பல நிலநடுக்கங்கள் சக்தி குறைந்து காணப்படுகிறது. இதனால் பொருட்சேதம், உயிர்சேதம் என்பது ஏற்படவில்லை.

நேற்றைய தினம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.8 என பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் நேற்று நள்ளிரவில் 11.01 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை அந்த பகுதி மக்கள் உணர்ந்துள்ளனர். இருப்பினும் ரிக்டர் அளவுகோலில் 3.2 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இரவு நேரம் என்பதாலும், நிலநடுக்கம் சக்தி குறைந்து காணப்பட்டதாலும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

அதேபோல் ராஜஸ்தான் மாநிலம் பாலியில் நள்ளிரவு 1.29 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஜம்மு காஷ்மீரை விட சக்தி வாய்ந்ததாக இருந்துள்ளது. அதாவது பாலியில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்பது ரிக்டர் அளவுகோலில் 3.7 என்ற அளவில் பதிவாகி உள்ளது. அதிர்ஷ்டவசமாக ஜம்மு காஷ்மீர் கிஷ்த்வார் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் பாலியில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். சமீபகாலமாக வடஇந்தியாவில் சில இடங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் நள்ளிரவில் ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தானில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here