வெங்கட் பிரபு இயக்கத்தில் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அடுத்ததாக தற்பொழுது கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பு நடக்கும்பொழுது நடிகர் விஜய் ஸ்கேடிங் சைக்கிள் ஓட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. தற்பொழுது படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது என ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் நடிகர் விஜய் சால்ட் அன் பெப்பர் ஹேர்ஸ்டைலில் கண்ணாடி அணிந்த தோற்றத்தில் காணப்படுகிறார்.





















