இரசாயனக் கழிவு சேமிப்பு கிடங்கில் தீப்பரவல்

சிரம்பான்:

போர்ட்டிக்சன், புக்கிட் பெலண்டூக்கில் உள்ள இரசாயனக் கழிவுகள் சேமிப்பு கிடங்கு நேற்று ஏற்பட்ட தீயில் எரிந்து நாசமானது.

மாலை 5.50 மணியளவில் ஏற்பட்ட தீயை சமாளிக்க மொத்தம் நான்கு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களை சேர்ந்த 66 தீயணைப்பு அதிகாரிகள், உறுப்பினர்கள் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக நெகிரி செம்பிலான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித்தொடர்பாளர் கூறினார்.

அவர்கள் அங்கு சென்றபோது, சுமார் 900 சதுர மீட்டர் பரப்பளவிலுள்ள இரசாயனக் கழிவுகள் சேமிப்பகத்தின் தளவாடங்கள் போடப்பட்டிருந்த இடத்தில் மூண்ட தீயால், அப்பகுதியை முற்றிலும் எரிந்து நாசமானது ” என்று அவர் கூறினார்.

இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவோ அல்லது உயிரிழக்கவோ இல்லை என்றும், இரவு 8.18 மணியளவில் தீ வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here