கூச்சிங்:
நேற்று (ஏப்ரல் 14) அதிகாலை பரியோ, கம்போங் பா உமோரில் உள்ள சரவாக் துணை அமைச்சர் டத்தோ ஜெராவாட் காலாவின் வீடு தீயில் எரிந்து நாசமானது.
குறித்த சம்பவம் தொடர்பில் அதிகாலை 1.40 மணியளவில் மாருடி தீயணைப்பு நிலையத்திற்கு அழைப்பு வந்ததாகவும், உடனே தன்னார்வ தீயணைப்பு வீரர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பியதாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
“கிராம மக்கள், காவல்துறை பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் இணைந்து தீயை கட்டுப்படுத்தவும், அணைக்கவும் நடவடிக்கை எடுத்தனர், ஆனாலும் வீடு முற்றிலும் எரிந்து நாடமானது என்று, இன்று திங்கள்கிழமை (ஏப்ரல் 15) தீயணைப்பு துறை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறித்த வீட்டில் வசித்த ஆறு பேரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் அவ்வறிக்கையில் அது கூறியது.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் இழப்பீடு இன்னும் விசாரணையில் உள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.