மலாக்காவில் திடீர் வெள்ளம்; 122 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்

கோலாலம்பூர்:

நேற்று மாலை முதல் மலாக்காவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, மொத்தம் 122 பேர் அங்கு ள்ள மூன்று தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 8 மணி நிலவரப்படி, ஆயர் கெரோவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, மலேசியக் குடிமைத் தற்காப்புப் படையின் மலாக்கா மாநில இயக்குநர் , லெப்டினன்ட் கர்னல் (PA), கமாருல்சியா முஸ்லிம் கூறினார்.

அதேவேளயில் “அலோர் காஜா மாவட்டத்தில், 25 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 72 பேரும், பாலாய் ராயா புக்கிட் பாலாயில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 38 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here