சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் பியர் ஒலிவியர் இந்தியா வலுவான செயல்திறன் கொண்ட நாடாக உள்ளது. இதன் மூலம், உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடர்கிறது. 2023 முதல் 2024 வரையிலான நிதியாண்டில் நாங்கள் திருத்தம் செய்துள்ளோம். 2024ஆம் நிதியாண்டில் இருந்து 2025-ம் ஆண்டிற்கு 0.3 சதவீத புள்ளிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதில் இந்தியா நன்றாகச் செயல்பட்டு வருகிறது என்றார்.
மேலும் உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின் மதிப்பில், இந்தியாவின் வளர்ச்சி 2024ஆம் ஆண்டில் 6.8 சதவீதமாகவும், 2025ஆம் ஆண்டு 6.5 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது வலிமையானது. உள்நாட்டுத் தேவை மற்றும் உழைக்கும் வயது மக்கள்தொகையில் தொடர்ந்து வலுப்பெறுவதைப் பிரதிபலிக்கிறது.
அதே நேரத்தில், வளர்ந்து வரும் மற்றும் வளரும் ஆசியாவின் வளர்ச்சி 2023ஆம் ஆண்டு மதிப்பிடப்பட்ட 5.6 சதவீதத்தில் இருந்து 2024ஆம் ஆண்டில் 5.2 சதவீதமாகவும், 2025-ம் ஆண்டில் 4.9 சதவீதமாகவும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டில் 3.2 சதவீதமாக மதிப்பிடப்பட்ட உலகளாவிய வளர்ச்சி, 2024 மற்றும் 2025இல் அதே வேகத்தில் தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.