கட்டாய உழைப்பில் ஈடுபடும் முதலாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை! மனிதவள அமைச்சர் 

கோலாலம்பூர்:

லேசியாவில் கட்டாய உழைப்பு இல்லை என்று நான் கூறவில்லை. ஆனால் எண்ணிக்கை அவ்வளவு பெரியதாக இருக்கும் என்று நினைக்கவில்லை,” என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

நவீன அடிமைத்தனம் மலேசியாவிற்குள் “குறிப்பிடத்தக்க சட்டவிரோதத் தொழிலாக” உள்ளது என்று கூறிய இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஆர்வலர் ஆண்ட்ரூ வாலிஸின் (UK-based activist Andrew Wallis) கூற்றுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மலேசியாவில் 212,000 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஆண்ட்ரூ வாலிஸ் கூறியுள்ளார்.

இந்த எண்ணிக்கை குறித்து தனக்கு சந்தேகம் இருப்பதாகக் கூறினாலும், அது இருப்பதை அமைச்சர் சிவகுமார் மறுக்கவில்லை.

கட்டாய உழைப்பில் ஈடுபடும் முதலாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக அவர் சொன்னார்.

முதலாளிகள் யாரேனும் கட்டாய உழைப்பைப் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

கட்டாய உழைப்பின் வரையறை “பரந்த” சூழ்நிலைகளை உள்ளடக்கியது .

“அவர்கள் (முதலாளிகள்) சம்பளம் கொடுக்காவிட்டாலும், அதுவும் கட்டாய உழைப்பாகக் கருதப்படலாம்.

“இந்த பிரச்சனையை தீர்க்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம் என்று மலேசிய வணிகர்கள் சம்மேளனத்தின் தீபாவளி உபசரிப்பில் கலந்து கொண்ட போது நிருபர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here