பி.ஆர்.ராஜன்
ஒரு நில விவகாரத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்தியா பாபி. இதுதான் இவர்களின் குணமே என்று ஒரு வங்காளதேசியின் முதல் மனைவி படுகேவலமாக பேசினார்.
இந்து மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு மதம் மாறிய இப்பெண் ரவாங்கில் பிறந்து வளர்ந்தவர். இங்கு வாழும் மக்களூக்கு நன்கு அறிமுகமானவர். இவர் மதம் மாறி ஒரு வியாபாரியான வங்காளதேசியை திருமணம் செய்துகொண்டார். அதன் பின் இவரின் போக்கு மாறியது.
இப்பெண்ணின் வங்காளதேசி கணவர் கம்போங் முகம்மட் தாய்ப் என்ற கம்போங் ஸ்ரீ தெராத்தாய் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு எதிரே உள்ள ஆறு லோட் நிலத்தை வாங்கி, வங்காளதேச சாப்பாட்டுக் கடையை நிர்மாணிக்க ஆரம்பித்தார்.
இதற்கு ஆலய நிர்வாகம் தெரிவித்த ஆட்சேபங்களுக்கு அந்நபர் செவிசாய்க்கவில்லை.
இந்த சாப்பாட்டுக்கடை ஆலயத்திற்கும் பக்தர்களுக்கும் இடையூறாக இருக்கும். இதனால் இந்த ஆறு லோட் நிலத்தையும் வாங்கிக்கொள்ள ஆலய நிர்வாகத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு வந்த வங்காளதேசி தடித்த வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார்.
அதுமட்டுமன்றி ‘என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. எனக்கும் ஆள் இருக்கிறார்கள். உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சவால்விடுக்க இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த இந்தப் பெண் ‘இந்தியா பாபி’…இவனுங்க எல்லாம் இப்படி தான் என்று எகிறியிருக்கிறார்.
இரு தரப்பிலும் போலீஸ் புகார் செய்யப்பட்டது. வங்காளதேசி ஆடவரும் ஆலய செயலாளரும் கைது செய்யப்பட்டு மூன்று நாள் தடுப்புக் காவலுக்குப் பின் விடுவிக்கப்பட்டனர். நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஆனால் இந்த களேபரத்திற்கு மூலக் காரணமான அந்தப் பெண் இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கும் விவகாரம் கோல குபு பாரு இடை தேர்தலில் விஸ்வரூபம் எடுக்க இருக்கிறது.
இந்தியர்களை தகாத வார்த்தையால் இழிவுப்படுத்திய அந்தப் பெண்ணை கைது செய்யவில்லை என்றால் இன்னும் ஒரு வாரத்தில் கோல குபு பாருவில் ஆட்சேப ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அக்கம்பத்து மக்கள் ஏற்பாடு செய்து வருவதாக நம்பப்படுகிறது.
இதனிடையே, சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு உத்தரவின் பேரில் அந்த வங்காளதேச ஆடவர் நிர்மாணிப்பில் இருந்த தன்னுடைய சாப்பாட்டுக் கடையை சில தினங்களுக்கு முன் இடித்து தரைமட்டமாக்கினார்.