தேர்தல் முடிந்ததுமே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட மாற்றம்.. மகிளா காங். தலைவராக ஹசீனா சையத்

சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் லோக்சபா தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு 102 லோக்சபா தொகுதிகளில் நிறைவடைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் கட்சி ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்ச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் நியமனத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் மயிலாடுதுறை தொகுதியில் மகிளா காங்கிரஸ் தலைவராக இருந்த வக்கீல் ஆர்.சுதா போட்டியிட்டார்.

வக்கீல் சுதா இந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய நிலையில் தற்போது, தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதன்படி, ஹசீனா சயத் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஹசீனா சையத், மகிளா காங்கிரஸ் தேசிய செயலாளராக பதவி வகித்து வந்தார். டி.வி விவாத நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் சார்பில் பங்கேற்று கருத்துகளை முன்வைத்து வருபவர் ஹசீனா சையத்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here