சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு தெலுக் இந்தானில் பல சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படும்

சித்ரா பௌர்ணமி விழாவை ஒட்டி தெலுக் இந்தானில் பல சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படும். செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 23) மாலை 4.30 மணிக்குத் தொடங்கும் ஜாலான் பசார்-ஜாலான் மஹ்கோத்தா, ஜாலான் செலாட்-ஜாலான் வூ சாய்க் ஹாங் மற்றும் ஜாலான் பசார்-ஜாலான் மஹாராணி ஆகியவை இதில் அடங்கும் என்று ஹிலிர் பேராக் OCPD உதவி  ஆணையர் அஹ்மத் அட்னான் பஸ்ரி கூறினார்.

பொதுமக்கள், குறிப்பாக ரத யாத்திரையின்போது அந்தந்தப் பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள், பணியில் இருக்கும் போலீசாருக்கு ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதுகுறித்து அவர் திங்கள்கிழமை (ஏப்ரல் 22) வெளியிட்டுள்ள அறிக்கையில், சாலைப் பயணிகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ரத யாத்திரையின் போது  பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சுமார் 100 போலீசார் நிகழ்வின் போது பணியில் இருப்பார்கள் என்று அவர் மேலும் கூறினார். மேலும் தகவலுக்கு, காவல் கட்டுப்பாட்டு மையத்தை 05-629 9222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here