நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்து பழங்குடியினர்கள் போலீசில் புகார்

குவா மூசாங்:

குவா மூசாங்கிலுள்ள மூன்று குடியிருப்புகளைச் சேர்ந்த 30 ஓராங் அஸ்லியினர், கடந்த மூன்று மாதங்களாக தங்கள் குடியிருப்புகளுக்கு அருகில் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அதிகமாக இருப்பதாகக் கூறி பழங்குடியினர்கள் போலீசில் புகாரளித்துள்ளனர்.

அவர்கள் கம்போங் செடால், கம்போங் பெர், கம்போங் கெர்போக், கம்போங் மென்ட்ரோட், பங் ஹேட் ஆகிய இடங்களில் வசிக்கும் போஸ் பெர், பூருக் கிலிருந்து தெமியர் பழங்குடியினத்தைச் சேர்ந்த சுமார் 1,000  பழங்குடினர்கள் இக்கிராமத்தில் வசிக்கின்றனர்.

கிளாந்தான் பழங்குடியினரின் கிராமங்களின் ஒன்றியத்தின் (JKOAK) துணைத் தலைவர் நசீர் டோல்லா, 36, கூறுகையில், மரம் வெட்டுதலும் விவசாயமும் சார்ந்த நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சமீபத்தில் நிலத்தை மேம்படுத்தும் நிறுவனத்தின் பிரதிநிதிகளால் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

“ஆரம்பத்தில், நாங்கள் நிறுவனத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் திட்டத்தைத் தொடர வேண்டாம் என்று வலியுறுத்தினோம். இந்தத் திட்டம் 800 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது என்றும், இது பழங்குடியினரின் வழக்கமான வசித்துவரும் இடங்களைப் பாதிக்கும் என்றும், மேலும் அங்குள்ள நிலத்தின் மீதான எங்கள் உரிமைகளை இழக்கச் செய்யும் என்றும் கூறினோம் ”என்று அவர் இன்று பண்டார் பாருவில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here