கோலாலம்பூர்:
பேராக்கின் லுமூட்டில் தேசிய கடற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதியதில் மொத்தம் 10 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படையின் நிகழ்விற்கான ஓர் ஒத்திகையின்போது, இன்று காலை 9.03 மணிக்கு பேராக்கின் சித்தியவான் விமானத்தளத்திலிருந்து இருந்து புறப்பட்ட சம்பந்தப்பட்ட இரண்டு ஹெலிகாப்டர்களும், வானில் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

ஏழு பணியாளர்களை ஏற்றிச் சென்ற HOM ஹெலிகாப்டர் (M503-3) லுமூட்டின் TLDM ஸ்டேடியத்தின் படிக்கட்டுகளில் விழுந்து நொறுங்கியது, அதே நேரத்தில் மூன்று பணியாளர்களை ஏற்றிச் சென்ற Fennec ஹெலிகாப்டர் TLDM விளையாட்டு வளாகத்திலிருந்த நீச்சல் குளத்தில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.





















