கிருஷ்ணரின் அவதாரத்தை போற்றி வழிபடும் திருநாள் கிருஷ்ண ஜெயந்தி, தர்மத்தை நிலை நாட்டுவதற்காகவும், தன்னுடைய பக்தர்களையும், உலக உயிர்களையும் காப்பதற்காகவும் ஒவ்வொரு யுகத்திலும் மகாவிஷ்ணு, ஒவ்வொரு அவதாரம் எடுத்தார். அவரது தசாவதாரங்களில் ஒன்பதாவது அவதாரமாக திகழ்வது கிருஷ்ண அவதாரம். தர்மத்தை நிலை நாட்டுவதுடன், மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களை தெய்வ நிலைக்கு உயர்த்திக்் கொண்டு, இறைவனை அடையும் வழியையும், மனிதர்கள் தங்களின் கர்மவினைகளால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபடவும் வழிகாட்டும் பகவத்கீதையை உலகிற்கு அருளுவதற்காக எடுக்கப்பட்டதே கண்ணன் அவதாரம் ஆகும்.
கண்ணன் அவதரித்தது ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியும்,
ரோகிணி நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் என புராணங்கள் சொல்கின்றன. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத தேய்பிறையில் அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்து வருமா என கேட்டால், அது மிக அரிதாக தான் அமையும். இதனால் தேதிகளின் மாறுபாடு காரணமாக எந்த நாளில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாட வேண்டும் என்ற குழப்பம் ஆண்டுதோறும் ஏற்படுவது உண்டு. அதே போல் கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி அல்லது ஸ்ரீ ஜெயந்தி ஆகிய இரண்டும் ஒன்றா அல்லது வேறு வேறா? இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்ற குழப்பமும் பலருக்கும் உள்ளது. இதற்கான விளக்கத்தையும், இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி- கோகுலாஷ்டமியை எந்த நாளில் எப்படி கொண்டாட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
கிருஷ்ணரின் அவதாரத்தை போற்றி வழிபடும் திருநாள் கிருஷ்ண ஜெயந்தி, தர்மத்தை நிலை நாட்டுவதற்காகவும், தன்னுடைய பக்தர்களையும், உலக உயிர்களையும் காப்பதற்காகவும் ஒவ்வொரு யுகத்திலும் மகாவிஷ்ணு, ஒவ்வொரு அவதாரம் எடுத்தார். அவரது தசாவதாரங்களில் ஒன்பதாவது அவதாரமாக திகழ்வது கிருஷ்ண அவதாரம். தர்மத்தை நிலை நாட்டுவதுடன், மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களை தெய்வ நிலைக்கு உயர்த்திக் கொண்டு, இறைவனை அடையும் வழியையும், மனிதர்கள் தங்களின் கர்மவினைகளால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபடவும் வழிகாட்டும் பகவத்கீதையை உலகிற்கு அருளுவதற்காக எடுக்கப்பட்டதே கண்ணன் அவதாரம் ஆகும.
கண்ணன் அவதரித்தது ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் என புராணங்கள் சொல்கின்றன. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத தேய்பிறையில் அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்து வருமா என கேட்டால், அது மிக அரிதாக தான் அமையும். இதனால் தேதிகளின் மாறுபாடு காரணமாக எந்த நாளில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாட வேண்டும் என்ற குழப்பம் ஆண்டுதோறும் ஏற்படுவது உண்டு. அதே போல் கிருஷ்ண ஜெயந்தி அல்லது ஸ்ரீ ஜெயந்தி ஆகிய இரண்டும் ஒன்றா அல்லது வேறு வேறா? இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்ற குழப்பமும் பலருக்கும் உள்ளது. இதற்கான விளக்கத்தையும், இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி- கோகுலாஷ்டமியை எந்த நாளில் எப்படி கொண்டாட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி சனிக்கிழமை, அதாவது ஆடி மாதத்தின் கடைசி நாளில் வரும் அஷ்டமியை கோகுலாஷ்டமி என்றும், செப்டம்பர் மாதம் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் கிருஷ்ண ஜெயந்தி என்று காலண்டரில் குறிப்பிட்டுள்ளார்கள். இவற்றில் எதை கொண்டாட வேண்டும் என்ற குழப்பம் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி ஆகிய இரண்டுமே வேறு வேறு ஆகும். அதாவது, அஷ்டமி திதியை அடிப்படையாக கொண்டு கொண்டாடப்படுவது கோகுலாஷ்டமி ஆகும். இது சில ஆண்டுகள் ஆவணி மாதத்திலும் வரும், சில ஆண்டு ஆடி மாதத்திலும் வரும் , ஆவணி மாதம் மற்றும் ரோகிணி நட்சத்திரமும் இணைந்து வரும் நாள் தான் கிருஷ்ண ஜெயந்தி ஆகும். பொதுவாக பிறந்த நாளை நாம் நட்சத்திர அடிப்படையில் தான் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் கிருஷ்ணர் அவதரித்த நாளான கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 14ம் தேதி தான் கொண்டாட வேண்டும்.



















