என் குடும்பத்திலேயே பலருக்கு ஓட்டு இல்லை- ஜெயக்குமார்

ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
* சென்னையில் பலரின் பெயர்கள் விடுபட்டுள்ளன.
* பலர் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாமல் திரும்பினர்.
* வாக்குப்பதிவு சதவீத குளறுபடி, தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
* என்னுடைய குடும்பத்திலேயே பலருக்கு ஓட்டு இல்லை.
* வெறுப்பு அரசியல், மத துவேச பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது.
* பிரதமரின் மத துவேச பேச்சுகளுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
* சசிகலா எழுதியதாக சொல்லப்படும் கடிதம், வெற்று கடிதம் என்று  அவர் கூறினார்.
பேட்டியின் போது தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் ஜெயவர்தன், நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here