ஜோகூர்:
சிங்கப்பூரில் பணியாற்றும் மலேசியர்களுக்கு வசதியாக, ஜோகூர் சோதனைச்சாவடிகளில் QR குறியீட்டுக் குடிநுழைவு முறை ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்தப் புதிய குடிநுழைவு முறையை மலேசியக் குடிநுழைவுத்துறை நிர்வகிக்கும்.
சோதனைச்சாவடிகளைக் கடந்து செல்ல கடப்பதிழைக் காட்டுவதற்குப் பதிலாக, சிங்கப்பூருக்கு வேலை நிமித்தம் பயணம் செய்யும் தொழிற்சாலை ஊழியர்கள் QR குறியீட்டைப் பயன்படுத்தலாம்.
இந்தப் புதிய திட்டத்துக்கு முன்னோட்டமாக, தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் மலேசியக் குடிநுழைவு அதிகாரிகள் ஏறி, ஸ்கேனர்களைப் பயன்படுத்தி ஊழியர்களின் QR குறியீடுகளை ஸ்கான் செய்வார்கள் என்று, ஜோகூர் மாநிலப் பொதுப் பணிகள், போக்குவரத்து, உள்கட்டமைப்பு, தொடர்புக் குழுவின் தலைவர் முகமட் ஃபஸ்லி முகமட் சாலே தெரிவித்தார்.
உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச்சாவடிகள் வழியாகச் செல்லும் வாகனங்களுக்கு QR குறியீட்டுக் குடிநுழைவு முறையை சிங்கப்பூர் கடந்த மார்ச் மாதம் நடைமுறைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.




















