தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவரான நடிகர் தியாகராஜன், தன் மகன் பிரஷாந்தையும் சினிமாவில் நடிக்க அறிமுகப்படுத்தினார். 90களில் தன் நடிப்பாலும் அழகாலும் கவர்ந்து வந்த பிரசாந்த் ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பில்லாமல் காணாமல் போனார். இடையில் அவரது திருமணம் வாழ்க்கை பிரச்சனையில் முடிய 5 ஆண்டுகள் வழக்குகளை சந்தித்து வந்தார்.
அதனை தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து பிரசாந்த் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். 5 வருஷம் பிரஷாந்த் மன உளைச்சலில் இருந்தது எனக்கு மிகப்பெரிய வருத்தம் என்றும் விரைவில் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது என் கடமை என்று கூறியிருந்தார் அவரது அப்பா தியாகராஜன். தற்போது பிரசாந்த் இரண்டாம் திருமணம் குறித்து பத்திரிக்கையாளர் வித்தகன் சேகர் சமீபத்தில் ஒரு வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் பிரசாந்த் தந்தை தியாகராஜன் அவர்களை தொடர்பு கொண்டு பிரசாந்த்-க்கு எப்போது திருமணம் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். எப்போது பண்ண போகிறீர்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர், பிரசாந்த் முழு கவனம் அந்தகன் படத்தை பற்றி தான்.
அந்த படம் ரிலீஸ் ஆன பிறகு கட்டாயமாக திருமணம் செய்து வைப்போம் என்று கூறினார். சினிமாவை சேர்ந்த நடிகையா? என்று கேட்டதற்கு சினிமா சார்ந்த பெண் கிடையாது என்று கூறியதாக வித்தகன் சேகர் தெரிவித்துள்ளார்.