கோலாலம்பூர்:
கெந்திங் மலையிலுள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நூடில்ஸ் சமைத்தது தொடர்பில் சமூக ஊடகங்களில் வைரலான காணொளி தொடர்பில், 4 பேருக்கு எதிராக நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
நாளை காலை 9 மணிக்கு பகாங்கின் பெண்டாங் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று பெண்டாங் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஜைஹாம் முஹமட் காஹார் கூறினார்.
இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 11 பேர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த நால்வருக்கு எதிராக மற்றவர்களின் உயிருக்கு அல்லது பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்ததற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 336 கீழ் குற்றம் சாட்டப்படும் என்றும் அவர் சொன்னார்.





















