தமிழகத்தில் கனமழைக்கு 11 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் கனமழைக்கு 11 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மே 16 முதல் 20 வரை கனமழை காரணமாக தமிழகத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கடலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மின்னல் தாக்கியும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 12 கால்நடைகள் இறந்துள்ளன. 24 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here