ஜாலான் பாலிக் பூலாவ்வில் உள்ள இரண்டு மாடி கடையில் தீ சம்பவம்; தாயும் இரு பிள்ளைகளும் உயிரிழப்பு

கோலாலம்பூர்:

ஜாலான் பாலிக் பூலாவ்விலுள்ள இரண்டு மாடி கடை வீட்டுப்பகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ சம்பவத்தில் விபத்தில் தாய் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் அவ்வட்டார மக்களை சோகத்திற்குள்ளாக்கியுள்ளது.

காலை 7 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், பலியானவர்களில் இருவர் கீழ் தளத்திலும் இன்னொருவர் மேல் தளத்திலும் இருந்துள்ளனர் என்று, ஸ்ரீ பாலிக் பூலாவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் முஹமட் ஃபாரிஸ் மன்சோர் கூறினார்.

பாதிக்கப்பட்ட தாய் மற்றும் அவரது மூன்று பிள்ளைகளுடன் குறித்த வளாகத்தில் இருந்தபோது, இந்த அசம்பாவிதம் நடந்ததாக கூறப்படுகிறது.

வீட்டில் தீச்சம்பவம் நிகழ்ந்தபோது, முதலில் அந்த தாய் இரண்டு மகன்களுடன் வெளியே வந்த நிலையில், தனது மகள் இன்னும் வீட்டுக்குள் சிக்கியிருப்பதை உணர்ந்த அவர் மீண்டும் கடை வீட்டு வளாகத்திற்குள் நுழைந்தார்.

இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் மற்றும் மொத்த இழப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here