கோலாலம்பூர்:
ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் “ஹிட் லிஸ்ட்” எனும் திரைப்படத்தை நாளை மே 31 ஆம் தேதி மலேசியாவின் பல திரையரங்குகளில் வெளியிடுகிறது MSK Cenemas Sdn. Bhd நிறுவனம். தேர்வு செய்து வெற்றி பெறக்கூடிய படங்களை மட்டும் வெளியிடுவதில் சாணக்கியம் கொண்டவர்கள் இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் சாரதா-கலை ஆகியோர்.
கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்காவின் அதிரடியான நடிப்பில் உருவான இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார், இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், இயக்குநர் சமுத்திரக்கனி, நடிகர் முனீஸ்காந்த், நடிகர் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் மூன்று முக்கிய கதாபாத்திரங்களில் அயலி படத்தில் பட்டைய கிளப்பிய நடிகை அபி நட்சத்திரா, பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தா மற்றும் ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ளனர்.
திரைப்படத்தின் பெயர்கூட கேட்பவர்களை சிந்திக்க வைக்கும் என்றால் நிச்சயம் “ஹிட் லிஸ்ட்” ஒரு சிறந்த ஹிட்டாக டாப் லிஸ்ட்டில் இடம்பிடித்துவிடும் என சமூக வலைத்தளங்களில் கருத்துக் கணிப்புகள் கிளம்புகின்றன. திரைப்பட வெளியீட்டுக்கு முன்னரே சமூக வலைத்தளங்களில் வெளியான ரீசர், ட்ரெய்லர் மற்றும் பல நேர்காணல்களில் பகிரப்பட்ட நேர்மறையான தகவல்களே இந்த விமர்சன வெள்ளத்திற்கு காரணமாகும்.
இந்த திரைப்படம் குறித்து விஜய் கனிஷ்கா ஊடகங்களிற்கு அளித்த ஒரு பேட்டியில், “எல்லாருமே டீஸர் & ட்ரெய்லர் பார்த்துவிட்டு ரொம்ப அப்ரிஷியேட் பண்ணாங்க. இயக்குநர்கள் நல்லா பண்ணிருக்காங்கன்னு சொன்னாங்க. இப்போ ட்ரெண்டிங் என்ன இருக்குன்னு பார்த்தோம். பார்வையாளர்கள் இப்போ இந்த மாதிரியான படங்களைத்தான் விரும்புறாங்க. இந்த படம் அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும். ஒரு நல்ல பெர்ஃபாமராக இந்த படத்தில் நான் தெரிவேன். ஹீரோவாக இருப்பதை தாண்டி ஒரு நல்ல பெர்ஃபாமராக இருப்பதுதான் முக்கியம் என்கிறார்.
ஊடகங்கங்களின் பார்வையில் முன்னதாகவே காண்பிக்கப்பட்ட இந்த திரைப்படம், உண்மையில் மிகப்பெரும் வெற்றிபெறும் என்பதை நாம் நம்புகிறோம். மலேசியர்களுக்கு ஒரு பிடித்தமான திரைப்படமாகவும் அமையும்.