ஒரே நாளில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை ஏற்றி ரேபிட் ரயில் சாதனை

கோலாலம்பூர்:

மே 29 அன்று ஒரு நாளில் மட்டும் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள LRT, MRT மற்றும் மோனோரயில் வழித்தடங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை ஏற்றி ரேபிட் ரெயில் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

ரேபிட் ரயில் நிறுவனம் நிறுவப்பட்டதிலிருந்து இதுவரை பதிவுசெய்யப்பட்ட பயணிகள் எண்ணிக்கையில் ஒரே நாளில் பயணமானவர்களின் அதிகபட்ச எண்ணிக்கையாகும் என்று, இன்று வெள்ளிக்கிழமை (மே 31) ரேபிட் ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“கடந்த மே 29 ஆம் தேதி, கெலனா ஜெயா வழித்தடத்தில் 287,102 பயணிகள் பயணம் செய்தனர், அதே நேரத்தில் அம்பாங்/ஸ்ரீ பெட்டாலிங் வழித்தடத்தில் 224,184 பேர் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தினர்.

அதேநேரம் மோனோ ரயிலில் 61,236 பயணிகள் பயணித்த நிலையில் காஜாங் செல்லும் மோனோ ரயிலில் 274,302 பயணிகள் பயணித்துள்ளனர்.
புத்ராஜெயா செல்லும் மோனோ ரயிலில் 157,767 பயணிகள் பயணித்துள்ளனர்.

இது மொத்தமாக 1,004,59 ஆக இருந்தது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பயனர்களின் எண்ணிக்கை 35 விழுக்காடு அதிகமாகும்.

கேலானா ஜெயா லைன் மற்றும் கஜாங் லைன் ஆகியவற்றில் ரயில் பெட்டிகளின் கொள்ளளவு அதிகரிப்பு மற்றும் ரயில் பாதையில் பல புதிய கவர்ச்சிகரமான இடங்களைத் திறப்பது உள்ளிட்ட பல முயற்சிகளால் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததாக அந்நிறுவனம் கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here